எங்களைப் பற்றி

எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் வரலாறு

 

 

தோற்றம்

சென்னை மாகாண அரசிதழ்களை அச்சிட்டு வெளியிடும் பொருட்டு, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் 10 பணியாளர்களுடன் சிறிய அரசு அச்சகமாக 1831 - ஆம் ஆண்டு திசம்பர்த் திங்கள் 17 -ஆம் நாள் துவங்கப்பட்ட எழுதுபொருள் அச்சுத்துறை 190 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

அரசு அச்சகங்கள் அமைந்துள்ள இடம்

எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் கீழ் அரசு மைய அச்சகம் உள்ளிட்ட 07 அரசு கிளை அச்சகங்களும் ஓர் எழுதுபொருள் அலுவலகமும் செயல்பட்டு வருகின்றன.
  • அரசு மைய அச்சகம், வள்ளலார் நகர் சென்னை-600 001.
  • அரசு கிளை அச்சகம், கோ.புதூர், மதுரை- 625 007.
  • அரசு கிளை அச்சகம், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, மதுரை-23
  • அரசு கிளை அச்சகம், துவாக்குடி, திருச்சி-620 015
  • அரசு கிளை அச்சகம், ஐந்து ரோடு, சேலம்-636 004.
  • அரசு கிளை அச்சகம், புதுக்கோட்டை- 622 001
  • அரசு கிளை அச்சகம், விருத்தாசலம் - 602 002
  • எழுதுபொருள் அலுவலகம் , இராஜாஜி சாலை, சென்னை-600 001


எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் பணியாளர்கள் விவரம்

இந்தத் துறையில் 1055 ஆண் பணியாளர்கள் 581 பெண் பணியாளர்கள் உட்பட மொத்தம் 1636 பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இதில் 247 மாற்றுத்திறனாளி பணியாளர்களும் அடங்குவர்.

எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் தலைமை அமைப்பான ஆணையரகம், அலுவலர்கள் / அமைச்சுப்பணியாளர்கள் உள்ளிட்ட 210 பணியாளர்களுடன் இயங்கி வருகிறது.

அரசு மைய அச்சகம், சென்னை-1

சென்னை மாநகராட்சியில் வள்ளலார் நகரில் 5.5 ஏக்கர் பரப்பளவில் இயங்கும் அரசு மைய அச்சகம், சென்னை-01 எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் பிரதான அச்சகமாகும். இவ்வச்சகத்தில் 670 அலுவலர்கள் / அமைச்சுப் பணியாளர்கள் / தொழில் நுட்ப பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். வரவு செலவு பிரிவு மற்றும் அதிரகசிய பிரிவில் ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து வார நாட்களிலும் பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

அரசு மைய அச்சகத்தில் நவீன வசதிகளுடன் 1,25,000 சதுர அடிகள் பரப்பளவில் இரண்டு அடுக்குத் தளங்களுடன் கூடிய புதிய கட்டடம் கட்டப்பட்டு அதில் நிருவாகம் மற்றும் தொழில்நுட்பம் பிரிவுகள் செயல்படுகின்றன. மேலும், புதிய தொழில்நுட்ப அம்சங்களுடன் நவீனமயமாக்கப்பட்ட இயந்திரங்கள் நிறுவப்பட்டு இயங்கி வருகின்றன.

மூன்று முறைமாற்றத்தில் செயல்படும் அரசு மைய அச்சகத்தின், செயல்பாடுகளை இரண்டு பணி மேலாளர்கள் நிர்வகிக்கின்றனர்.

அரசு மைய அச்சகத்தில் அச்சிடப்படும் முக்கியத்துவம் வாய்ந்த பணிகள்

1

தமிழ்நாடு அரசிதழ்கள் / சிறப்பு வெளியீடுகள்

2

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் நடவடிக்கைக் குறிப்புகள்

3

பல்வேறு சட்டமன்ற குழுக்களின் அறிக்கைகள்

4

வரவு செலவு திட்ட ஆவணங்கள்

5

அதிரகசிய பணிகள்

6

தேர்தல் படிவங்கள், பதிவேடுகள், கையேடுகள் மற்றும் வாக்குச் சீட்டுகள்

7

தமிழ்நாடு மாநில கணக்காய்வுத் தலைவரின் அறிக்கைகள்


  • மேதகு ஆளுநர்,

  • மாண்புமிகு முதலமைச்சர்,

  • மாண்புமிகு சட்டமன்றப் பேரவைத் தலைவர்,

  • மாண்புமிகு தலைமை நீதியரசர்,

  • மாண்புமிகு நீதியரசர்கள்,

  • மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள்,


  • மாண்புமிகு சட்டமன்றப் பேரவைத் துணைத் தலைவர்,

  • மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள்,

  • தலைமைச் செயலாளர் அரசு முத்திரையுடன் பெயர் அச்சிடப்பட்ட கடிதத் தாள் தொகுப்பு மற்றும் காகித உறைகள் அரசு மைய அச்சகத்தில் தயாரிக்கப்படுகின்றன.


  • 1

    காலமுறை வெளியீடுகள்

    2

    அனைத்து அரசு துறைகளுக்கான நிலைப்படுத்தப்பட்ட மற்றும் நிலைப்படுத்தப்படாத படிவங்கள் மற்றும் பதிவேடுகள்

    3

    வணிவரித் துறைப் படிவங்கள், கருவூலத்துறை, காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை

    4

    அரசு தொழில்நுட்ப கல்வித் துறை மற்றும் அரசுத் தேர்வுகள் துறை நடத்தும் தேர்வுகளுக்கான விடைத்தாட்கள் மற்றும் துணிவேய்ந்த உறைகள்

    5

    கருவூலத்துறை படிவங்கள் மற்றும் பதிவேடுகள்

    6

    பல்கலைக்கழகத்திற்கான விடைத்தாட்கள்

    7

    நாட்காட்டி மற்றும் நாட்குறிப்பேடுகள்

    8

    அரசு மைய அச்சகம், சென்னையில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு மாவட்ட அரசிதழ்கள் அச்சடிக்கப்படுகின்றன.


    சென்னை மாநகராட்சியில் வள்ளலார் நகரில் 5.5 ஏக்கர் பரப்பளவில் இயங்கும் அரசு மைய அச்சகம், சென்னை-01 எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் பிரதான அச்சகமாகும். இவ்வச்சகத்தில் 670 அலுவலர்கள் / அமைச்சுப் பணியாளர்கள் / தொழில் நுட்ப பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். வரவு செலவு பிரிவு மற்றும் அதிரகசிய பிரிவில் ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து வார நாட்களிலும் பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

    அரசு மைய அச்சகத்தில் நவீன வசதிகளுடன் 1,25,000 சதுர அடிகள் பரப்பளவில் இரண்டு அடுக்குத் தளங்களுடன் கூடிய புதிய கட்டடம் கட்டப்பட்டு அதில் நிருவாகம் மற்றும் தொழில்நுட்பம் பிரிவுகள் செயல்படுகின்றன. மேலும், புதிய தொழில்நுட்ப அம்சங்களுடன் நவீனமயமாக்கப்பட்ட இயந்திரங்கள் நிறுவப்பட்டு இயங்கி வருகின்றன.

    மூன்று முறைமாற்றத்தில் செயல்படும் அரசு மைய அச்சகத்தின், செயல்பாடுகளை இரண்டு பணி மேலாளர்கள் நிர்வகிக்கின்றனர்.

    அரசு மைய அச்சகத்தில் அச்சிடப்படும் முக்கியத்துவம் வாய்ந்த பணிகள்


    அரசு எழுதுபொருள் அலுவலகம், சென்னை-1


    இராஜாஜி சாலை சென்னை-1ல் அமைந்துள்ள அரசு எழுதுபொருள் அலுவலகத்தில் உதவி இயக்குநர் (எழுதுபொருள் கொள்முதல்), அமைச்சு பணியாளர்கள், தொழில் நுட்ப பணியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் என மொத்தம் 75 நபர்கள் பணிபுரிகிறார்கள்.
    தலைமைச் செயலகம், அனைத்து அரசு துறைகள் / அரசு அலுவலகங்களுக்கு தேவையான பல வகை காகிதங்கள், படியெடுப்பு காகிதங்கள், கோப்பு அட்டைகள் மற்றும் அரசு அச்சகங்களுக்கு படிவங்கள் மற்றும் பதிவேடுகள் அச்சடிக்க தேவையான காகித இனங்கள் அரசு விதிகளின்படி தமிழ்நாடு செய்தி தாள் மற்றும் காகித நிறுவனம் (TNPL) மூலமாகவும், தமிழ்நாடு ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப்புள்ளி சட்டம் 1998 மற்றும் 2000 ஆம் ஆண்டு விதிகளின்படி ஒப்பந்தப்புள்ளிகள் மூலமாக கொள்முதல் செய்து இருப்பில் வைத்து விநியோகம் செய்யும் அலுவலகமாக இயங்கி வருகிறது.
    மேதகு ஆளுநர் அலுவலகம், மாண்புமிகு முதலமைச்சர் அலுவலகம், மாண்புமிகு அமைச்சர் அலுவலகங்கள், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, தலைமைச் செயலகம், நீதிமன்றங்கள், தமிழ்நாடு லோக் ஆயுக்தா போன்ற நீதித்துறை அலுவலகங்கள், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள 4021 அரசு அலுவலகங்களுக்கு தேவையான காகிதங்கள் மற்றும் எழுதுபொருட்கள் சம்பந்தப்பட்ட அரசு அலுவலகத்தின் ஆண்டு தேவைப்பட்டியலின் அடிப்படையில் விலை ஏதும் இன்றி விநியோகம் செய்யப்படுகின்றன.
     
    மேலும், மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலம் உள்ளிட்ட 67 அலுவலகங்களுக்கு முன்பணம் பெற்று எழுதுபொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
     
    பாராளுமன்ற, சட்டசபை பொதுதேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்கான அனைத்து எழுதுபொருட்கள் தேர்தல் காகிதங்கள் மற்றும் உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து காகிதங்கள் கொள்முதல் செய்து அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு விநியோகம் இவ்வலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


    அரசு கிளை அச்சகம், கோ.புதூர், மதுரை-7

     
    மதுரை கோ.புதூரில் 1976 ஆம் ஆண்டு முதல் அரசு கிளை அச்சகம், மதுரை சொந்த கட்டிடத்தில் துணைப்பணிமேலாளர் தலைமையில் செயல்படுகிறது. துணைப் பணிமேலாளர், உதவிப் பணிமேலாளர்கள், அமைச்சுப் பணியாளர்கள், தொழில் நுட்ப பணியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் என 203 நபர்கள் பணிபுரிகின்றனர்.
     
    இக்கிளை அச்சகத்தில், அரசு வெளியீடுகள் துணை விற்பனை நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் பெயர் மாற்ற விண்ணப்பங்கள், தமிழ்நாடு அரசிதழில் பிரசுரம் செய்யப்பட்ட பிரதிகளை உரிய மனுதாரர்களுக்கு அனுப்பிவைக்கப்படுவதன் மூலம் தென் தமிழக மாவட்டங்களில் பொதுமக்கள் பயனடைகின்றனர்.


    அரசு கிளை அச்சகம், சேலம்

    1966-ஆம் ஆண்டு சேலம் குகைப் பகுதியில் துவக்கப்பட்ட அரசு கிளை அச்சகம், சேலம், 1986-ஆம் ஆண்டு முதல் சேலம் ஐந்து சாலையில் சிட்கோ தொழில்பேட்டையில் சொந்தக் கட்டடத்தில், உதவிப் பணி மேலாளர் நிலையிலான கிளை மேலாளர் தலைமையின் கீழ் அமைச்சுப் பணியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் அடிப்படைப் பணியாளர்கள் என 109 பணியாளர்களுடன் செயல்படுகிறது.


    அரசு கிளை அச்சகம், புதுக்கோட்டை

     
    அரசு மைய அச்சகத்திற்கு அடுத்து மிக பழைமை வாய்ந்த புதுக்கோட்டை கிளை அச்சகம், 1861-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இவ்வச்சகத்தில் உதவிப் பணிமேலாளர் நிலையில் கிளை மேலாளர் தலைமையின் கீழ் அமைச்சுப் பணியாளர்கள், தொழில் நுட்ப பணியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் என 81 பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.


    அரசு கிளை அச்சகம் திருச்சி

     
    1965-ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி அரியமங்கலம் தொழில் பேட்டையில் துவக்கப்பட்ட அரசு கிளை அச்சகம், திருச்சி 1990 ஆம் ஆண்டு முதல் துவாக்குடி, சிட்கோ வளாகத்தில் சொந்த கட்டடத்தில் உதவிப்பணிமேலாளர் நிலையிலான கிளை மேலாளர் தலைமையின் கீழ் அமைச்சுப் பணியாளர்கள், தொழிற்நுட்ப பணியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் என 100 பணியாளர்களுடன் செயல்படுகிறது.
     
    இக்கிளை அச்சகத்தில் செயல்படும் அரசு வெளியீடுகள் துணை விற்பனை நிலையத்தில் பெறப்படும் பெயர் மாற்ற விண்ணப்பங்கள் தமிழ்நாடு அரசிதழில் பிரசுரம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் மத்திய மற்றும் தென் மாவட்டங்களின் மக்கள் மிகவும் பயனடைகின்றனர்.


    அரசு கிளை அச்சகம், விருத்தாசலம்

     
    1966-ஆம் ஆண்டு அரசு கிளை அச்சகம், துவக்கப்பட்டு 1981-ஆம் ஆண்டு முதல் சொந்தக்கட்டடத்தில் துணைப் பணி மேலாளர் தலைமையின் கீழ் உதவிப் பணி மேலாளர் , அமைச்சுப் பணியாளர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் அடிப்படைப் பணியாளர்கள் என 92 பணியாளர்களுடன் செயல்படுகிறது.


    அரசு வெளியீடுகள் விற்பனை நிலையம், சென்னை

     
    எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகம், சென்னை-2 வளாகத்தில் அரசு வெளியீடுகள் விற்பனை நிலையமானது துணை இயக்குநர் (வெளியீடுகள்) அவர்களின் கட்டுபாட்டில் செயல்பட்டு வருகிறது.
     
    பெயர் மாற்றம் குறித்த அரசிதழ்கள், பணிப்பதிவேடுகள், சட்ட தொகுப்புகள், விதிகள் மற்றும் விதி தொகுப்புகள், அரசு அலுவலகங்களின் தொலைபேசி கையேடுகள், அரசிதழ்கள் ஆகியவை அரசு அலுவலர்கள் / பணியாளர்கள் மற்றும் பொது மக்களின் தேவைகளுக்காக விற்பனை செய்யப்படுகிறது. அரசு வெளியீடுகள் விற்பனை நிலையம் இந்திய அரசின் வெளியீடுகளை விற்பனை செய்யும் ஒரு முகவரமைப்பாகவும் செயல்பட்டு வருகிறது.
     
    தமிழ்நாடு அரசிதழில் தமிழில் பெயர்மாற்றம் செய்வதற்கு ரூ.115/- மற்றும் ஆங்கிலத்தில் பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.415/- மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பெயர் மாற்றம் செய்வதற்கு கட்டணம் ஏதுமின்றியும் அரசிதழில் வெளியிடப்படுகிறது.
    இவ்வச்சகம், துணைப் பணி மேலாளர் கட்டுப்பாட்டின் கீழ் 31 பணியாளர்களுடன் இரண்டு முறைமாற்றத்தில் செயல்படுகிறது.


    அரசு கிளை அச்சகம், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, மதுரை-23

     
    சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் அச்சுத் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்குடன் 2006-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
     
    இவ்வச்சகம், துணைப் பணி மேலாளர் கட்டுப்பாட்டின் கீழ் 31 பணியாளர்களுடன் இரண்டு முறைமாற்றத்தில் செயல்படுகிறது.

 

எங்களை பற்றி | நிர்வாக அட்டவணை | பொதுமக்களுக்கான சேவை | அரசாங்கத்திற்கான சேவை | தமிழ்நாடு அரசிதழ்/ சிறப்பிதழ் | வடிவங்கள் | முக்கிய தொடர்புக்கு | முக்கிய இணைப்புகள் | பின்னூட்டம்