
பொது மக்கள் தொடர்புடைய இத்துறையின் பணிகள்
(அ)
எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகம், சென்னை-2. இத்துறையின் பொது
தகவல் அலுவலர் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர்களின் விவரம் வருமாறு.(ஆ)
பொது மக்களின் விண்ணப்பத்தின்பேரில் பொதுவான பெயர் மாற்றம், மத மாற்றத்தின் காரணத்தால் பெயர் மாற்றம் குறித்த அறிவிக்கைகள் தமிழ்நாடு அரசிதழில் ஆங்கிலத்தில வெளியிட கட்டணம் ரூ.415/-(அஞ்சல் செலவு உட்பட) வசூலிக்கப்படுகிறது. தற்பொழுது தமிழில் பெயர் மாற்றம் குறித்த அரசிதழில் பிரசுரம் செய்ய கட்டணம் ரூ.115/- (அஞ்சல் செலவு நீங்கலாக) வசூலிக்கப்படுகிறது. (இதற்கான வழிமுறைகள்)
தமிழ்நாட்டை தவிர பிற மாநிலத்தவர்கள் பெயர் மாற்றம்
தமிழ்நாட்டை தவிர பிற மாநிலத்தவர்கள் பெயர் மாற்றம் விண்ணப்பித்து சான்றொப்பமிட்ட குடும்ப அட்டை / கடவுச் சீட்டு / வாக்காளர் அட்டை வட்டாட்சியரிடம் பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் இணைக்கப்படவேண்டும்.
தத்தெடுப்பு காரணமாக முதலெழுத்து மாற்றம் செய்தல்
பதிவு செய்யப்பட்ட தத்தெடுப்பு ஆவணம் இணைக்கப்படவேண்டும்.
விவாகரத்து காரணமாக பெயர் மாற்றம்
விவாகரத்து காரணமாக பெயர் மாற்றம் விண்ணப்பங்கள் சான்றொப்பமிட்ட நீதிமன்ற தீர்ப்பின் நகல் இணைக்கப்படவேண்டும்.
மதம் மாற்றம் தொடர்பான பெயர் மாற்றம்
மத அதிகாரிகளால் வழங்கப்பட்ட மதம் மாற்றம் தொடர்பான சான்று / மீண்டும் மதமாற்றம் தொடர்பான சான்றொப்பமிட்ட நகல் இணைக்கப்பட வேண்டும்.
திருநங்கைகள் / திருநம்பிகள் பெயர் மாற்றம் இலவசமாக செய்து அரசிதழ்கள் வெளியிடப்படுகிறது.
(இ)
பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டிய தமிழ்நாடு அரசின் ஆணைகள் நிலத்தைக் கையகப்படுத்தும் ஆணைகள், தொழிலாளர் தீர்ப்பாய ஆணைகள் போன்றவை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுகின்றன. .
சாதாரண பெயர் மாற்றம் / மத மாற்றத்தினால் பெயர் மாற்றம்
1 |
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி |
இதற்கான விண்ணப்பப் படிவங்கள் இப்பொருள் குறித்த மற்றைய விவரங்கள் பெற |
2 |
விண்ணப்பித்தல் குறித்த விவரங்கள் |
விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் மேற்குறிக்கப்பட்டுள்ள அலுவலகத்தில் இருந்து நேரடியாகவோ, அஞ்சல் மூலமாகவோ பெறலாம். விண்ணப்பத்தின் பின்புறத்தில் குறிக்கப்பட்டுள்ள விவரங்களைத் தவறாது அளித்தல், பெயர் மாற்றம் குறித்த அறிக்கைகளை விரைவில் தமிழ்நாடு அரசிதழில் வெளியிட வழி வகுக்கும். |
3 |
சம்மந்தப்பட்ட அரசிதழ் பெறுதல் |
விண்ணப்பப் படிவத்தில் குறிக்கப்பட்டுள்ள தொகையைச் செலுத்துபவர்களது பெயர் மாற்றம் குறித்து
அறிவிக்கை வெளியிடப்பட்ட அரசிதழ் பகுதியின் ஐந்து படிவங்கள் அஞ்சல் மூலம் விண்ணப்பதாரருக்கு அனுப்பப்படும்.
அதற்கு மேலும் படிகள் தேவைப்பட்டால், துணை இயக்குநர் (வெளியீடுகள்) அரசு வெளியீடுகள் விற்பனைப் பிரிவு,
|
4 |
அறிவிக்கை வெளியிடுவதற்கான தொகையைச் செலுத்துதல் |
விண்ணப்பத்தின் பின்புறத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொகைகைய அரசு வெளியீடுகள் விற்பனைப் பிரிவு, 110, அண்ணா சாலை, சென்னை-2ல்
அரசுப் பணி நாட்களில் காலை 10.00 மணி முதல் 1.30 மணி வரையும்,
மதியம் 2.00 மணி முதல் மாலை 3.00 மணி வரையும் செலுத்தி ரசீதைப் பெறலாம். |
5 |
பணம் செலுத்துவது குறித்த வேலை நாட்கள் மற்றும் வேலை நேரம் |
திங்கள் முதல் வெள்ளி வரை |
6 |
இப்பொருள் குறித்து குறைகள் பற்றித் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி |
துணை இயக்குநர் (வெளியீடுகள்) 110, அண்ணா சாலை, சென்னை-2னை, தொடர்பு கொள்ளும்போது தங்கள் முழு முகவரி, தொகை செலுத்தியதற்கான ரசீது எண். / கேட்புக் காசோலை வரைவு எண். மற்றும் நாள் ஆகிய விவரங்களைத் தவறாமல் குறிப்பிடவும். |
7 |
குறிக்கோள் |
கடந்த காலங்களில் பெயர் மாற்றம் /மதமாற்றம் போன்ற விவரங்களை அரசிதழில் பிரசுரம் செய்வதில் குறிப்பிட்ட காலதாமதம் மற்றும் பொது மக்களிடையே ஏற்பட்ட மனக்கசப்பு, அலைச்சல், கால விரயம் முதலியவற்றைத் தவிர்க்கும நோக்கத்துடன் இப்பணி தற்போது ஆணையரகத்திலேயே மேற்கொள்ளப்பட்டு, திங்கள் முதல் வெள்ளி வரை பெறப்படும் விண்ணப்பங்கள் அடுத்து வரும் புதன் கிழமைகளில் தவறாது பிரசுரம் செய்ய பொது மக்களுக்கு இத்துறை சேவை புரிந்து வருகிறது. இணையதள முகவரி: (http//www.stationeryprinting tn.gov.in |
தமிழ்நாடு அரசிதழ் பிரதிகளைப் பெறுதல்
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: |
பணி மேலாளர், அரசு மைய அச்சகம், வள்ளலார் நகர், சென்னை-1, தொலைபேசி எண்.044-2520 2228, 044-2520 2229 |
|
1 |
அரசிதழ் பற்றிய விவரங்கள் |
தமிழ்நாடு அரசிதழ், அரசுக்கும் மக்களுக்கும் ஒரு பாலமாகச் செயல்படுகிறது. பொது மக்களுக்குத் தெரிவிக்கப்பபடவேண்டிய அரசு ஆணைகள், தொழிலாளர் தீர்ப்பாய ஆணைகள், வரிவிதித்தல் குறித்த ஆணைகள், சமூக நலத்திட்டங்கள் போன்றவை அரசிதழில் வெளியிடப்படுகின்றன. |
2 |
அரசிதழில் பிரிவுகளும், விவரங்களும் |
தமிழ்நாடு அரசிதழின் பல்வேறு பிரிவுகளும், அவற்றில் வெளியிடப்படும் பொருள் குறித்த விவரங்களும் கீழே அளிக்கப்பட்டுள்ளன. மக்கள் தேவைப்படும் பிரிவுக்கான சந்தாத் தொகையைச் செலுத்தினால் பிரதிவாரம் அரசிதழ் தங்கள் வீடு தேடி வரும். |
3 |
பகுதி எண் மற்றும் பிரிவு குறித்த அரசிதழ்கள். |
விவரங்கள்
1 |
பகுதி I: |
அனைத்திந்திய பணிகளுக்கான பதவி உயர்வு, பணி நீக்கம், இரங்கல் அறிவிப்புகள், மாஜிஸ்டிரேட்டுகளை பதவியில் அமர்த்தும் நடைமுறை சடங்கு, மாண்புமிகு அமைச்சர்களிடைய அலுவல் ஒதுக்கீடு ஆகியவை குறித்து அறிவிக்கைகள், அரசும், உரிமையியல், குற்றவியல், குற்றவியல் நடுவர் சார்ந்த தகராறுகளில் சம்மந்தப்பட்டுள்ள ஏனைய தரப்பினரும் நீதிமன்ற வழக்குகளில் குறிப்பிட வேண்டியவை. |
2 |
பகுதி II - பிரிவு 1 :
|
செயலகத் துறைகளால் வெளியிடப்படும் மக்கள் கவனத்தை ஈர்க்கும் அல்லது மக்கள் தொடர்புடைய அறிவிக்கைகள் விற்பனை வரி விகிதத்தில் மாற்றங்கள், வேளாண் விளை பொருட்களுக்கு தரம் நிர்ணயித்தல், கொள்முதல் விலை நிர்ணயம் செய்தல், மது விலக்கு ஆயத்தீர்வை தொடர்பான சட்டத் திருத்தங்கள், நிலச் சீர்த்திருத்தம் தொடர்பான அறிவிக்கைகள், சட்ட விரோதமான நடவடிக்கைகள் தடை செய்தல் பற்றிய அறிவிக்கைகள் - அணையிலிருந்து நீர்ப் பாசனம் செய்தல் - தேதி அறிவித்தல் - அரசு பொது விடுமுறை அறிவிக்கை. |
பகுதி II - பிரிவு 2 : |
மோட்டர் வாகனச் சட்டத்தின்கீழ் மோட்டார் வாகன வரி செலுத்துவதிலிருந்து குறிப்பிட்ட சில வாகனங்களுக்கு விலக்கு அளித்தல், நிலத்தைக் கையகப்படுத்துதல், கடன் குறித்த அறிவிக்கைகள், பேருந்து தடங்களைத் தேசிய மயமாக்குதல், தொழிற்தகராறுகள் சட்டம், முத்திரைத்தாள் சட்டம், நிதி நிறுவன சட்டம், பதிவுத் துறை சட்டம், தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் குறைந்த பட்ச ஊதிய நிர்ணயம் சட்டம், குற்றவியல் காவல் நிலைய எல்லை நிர்ணயம், தமிழ்நாடு வனக்கோட்டம் குறித்த அறிவிக்கை, இந்திய கிறித்துவ திருமணச் சட்டம், நகர் ஊர் அமைப்பு திட்ட மாற்றம் வழங்குதல், அரசு ரகசிய காப்பு சட்டம்,தமிழகத்திலுள்ள பல்கலைக்கழக சட்ட விதிகள், தமிழக முதல்வர் காவல் துறையினருக்கு பதக்கம் வழங்குதல், மாசு கட்டுப்பாட்டு சட்டம், எரிசாராய இந்திய தயாரிப்பு அறிவிக்கை. |
|
3 |
பகுதி III - பிரிவு 1 (a) : |
பொதுவான சட்டமுறை விதிகள் செயலகத் துறைகளால் வழங்கப்படும் அறிவிக்கைகள், ஆணைகள், ஒழுங்குமுறை விதிகள் போன்றவைகள், உதாரணமாக சென்னை பார்மசி கவுன்சில் விதிகளுக்கு திருத்தங்கள். |
பகுதி III - பிரிவு 1 (b) :
|
பணி விதிகள் அட்ஹாக் விதிகள், இந்திய சட்டப்படி வெளியிடப்படும் ஆணைகள், அறிவிக்கைகள் மாநில மற்றும் சார்நிலை பணி விதிகளுக்கான திருத்தங்கள். |
|
பகுதி III - பிரிவு 2: |
துறைத் தலைவர்களால் வெளியிடப்படும் சட்டப்படியான அறிவிக்கைகள் மற்றும் ஆணைகள். |
|
4 |
பகுதி IV - பிரிவு 1: |
தமிழ்நாடு சட்ட வரைவுகள் |
பகுதி IV - பிரிவு 2: |
தமிழ்நாடு சட்டங்கள் மற்றும் அவசரச் சட்டஙகள் |
|
பகுதி IV - பிரிவு 3: |
மத்திய சட்ட வரைவுகள் |
|
பகுதி IV - பிரிவு 4: |
மத்திய சட்டங்கள் மற்றும் அவசரச் சட்டங்கள் |
|
5 |
பகுதி V - பிரிவு 1: |
தமிழ்நாடு அரசு பொதுத் (தேர்தல்கள்) துறையின் அறிவிக்கைகள் |
பகுதி V - பிரிவு 2: |
துறைத் தலைவர்களின் தேர்தல் அறிவிக்கைகள். |
|
பகுதி V - பிரிவு 3: |
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் விதி 192-ன் கீழ் சட்டமன்ற உறுப்பினரைத் தகுதியின்மை செய்வது குறித்து மேதகு ஆளுநரின் முடிவு. |
|
பகுதி V - பிரிவு 4: |
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவிக்கைகள். |
|
6 |
பகுதி VI - பிரிவு 1: |
மக்களுக்கு அக்கறையுள்ள பொருள் பற்றி துறைத் தலைவர்கள் வெளியிடும் அறிவிக்கைகள், சங்கங்கள் பதிவு மற்றும் கலைத்தல் - நில உச்சவரம்பு கையகப்படுத்துதல் - நீதித் துறையின் அனைத்து அறிவிக்கைகள் - நகர்ப்புற திட்டக்குழுமம் அடுக்குமாடி தொடர்பான அறிவிக்கை, மருத்துவக் குழு தேர்தல் மற்றும் அலுவலர் நியமனம் அறிவிக்கைகள். |
பகுதி VI - பிரிவு 2 |
துறைத் தலவர்களால் வெளியிடப்படும் மக்களில் ஒரு பிரிவினருக்கு மட்டும் அக்கறைக்குரிய அறிவிக்கைகள், மாவட்ட ஆட்சியர் - தமிழ்நாடு பஞ்சாயத்துக்கள் சட்டம் அறிவிக்கை - மாநில தேர்தல் ஆணைய அறிவிக்கை கல்வி சான்றிதழ் இழப்பு அறிவிக்கை - ஊராட்சித் தலைவர் பதவி நீக்கம், தமிழக சட்டப் பணிகள் துறை அறிவிக்கை - தமிழக மின்சார ஒழுங்கு முறை குழு அறிவிக்கை. |
|
பகுதி VI - பிரிவு 3 (a): |
மாநில மற்றும் மத்திய அரசு நிறுவனங்களால் வெளியிடப்படும் அறிவிக்கைகள் (தொகையைப் பெற்ற பின்னர் வெளியிடப்படும்), நீதித் துறையின் நொடிப்பு மனு அறிவிக்கைகள் - துறைமுகக் கழகங்களின் அறிவிக்கைகள், வஃக்பு வாரிய அறிவிக்கைகள். |
|
பகுதி VI - பிரிவு 3 (b): |
அரசு சார்பு நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களால் வெளியிடப்படும் அறிவிக்கைகள், தமிழ்நாடு மின்வாரிய அறிவிக்கைகள் - பல்கலைக் கழகங்களின் அறிவிக்கைகள். |
|
பகுதி VI - பிரிவு 4: |
பெயர் மாற்றம் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) போன்ற தனியார் விளம்பரங்கள் - தனியார் மற்றும் தனியார் நிறுவனங்கள் அளிக்கும் விளம்பரங்கள் - கம்பெனிச் சட்டத்தின் கீழ் விளம்பரங்கள். |
7. அரசிதழ் பெறுவதற்கான வழிமுறைகள்
1 |
சந்தா குறித்த விவரங்கள்: |
அரசிதழில் தேவையான பகுதி / பிரிவுக்கான சந்தாத் தொகையை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். சந்தாத் தொகை குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு செலுத்தப்பட வேண்டும். சந்தாத் தொகை செலுத்தப்பட்ட மாதத்தின் அடுத்த மாதத்தின் முதல் நாளிலிருந்து சந்தா தொகைக்கான காலம் கணக்கிடப்படும். |
2 |
தனிப்பட்ட பிரதியை பெறுதல்: |
தமிழ்நாடு அரசிதழின் குறிப்பிட்ட பிரதியை மட்டும் பெற விரும்பினால் 110, அண்ணா சாலை, சென்னை-2 -இல் உளள அரசு வெளியீடுகள் விற்பனை நிலையத்துடன் தொடர்பு கொள்ளலாம். குறிப்பு:தமிழ்நாடு அரசிதழின் படிகள் ஒரு வருடம் வரை விற்பனைக்காக தக்க வைத்துக் கொள்ளப்படுகிறது. எனவே, அரசிதழில் வெளியிட்டவுடன் படிகளை உடனடியாக பெற்றுக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். |
3 |
. புகார்கள் மற்றும் ஆலோசனைகளுக்காக: |
துணை இயக்குநர் (வெளியீடுகள்) 110, |
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: |
வள்ளலார் நகர், சென்னை-1 |
(ஈ)
தமிழ்நாடு அரசிதழ்கள் விற்பனை செய்யும் இடங்கள்
1 |
விற்பனை நிலைய முகவரி |
1.அரசு வெளியீடுகள் விற்பனை பிரிவு, 2.துணை விற்பனை நிலையம், 3.துணை விற்பனை நிலையம், 4. துணை விற்பனை நிலையம், |
இந்நிலையங்களில் விற்பனை செய்யப்படும் வெளியீடுகள் மற்றும் அவை விற்பனைக்காகத் தக்க வைவத்துக் கொள்ளப்படும் கால வரையறையும் கீழே அட்டவணையில் அளிக்கப்படுகின்றன.
வரிசை எண்
(1) |
வெளியீடுகள் விவரம். (2) |
விற்பனைக்குத் தக்கவைத்துக் கொள்ளப்படும் காலம். (3) |
1. |
தமிழ்நாடு அரசின் சட்டங்கள் (ஆங்கிலம் மற்றும் தமிழில்) நடைமுறை நூல்கள், வருவாய்த் துறையின் நடைமுறை ஆணைகள் |
7 வருடங்கள் |
2. |
பல்வகைப்பட்ட வெளியீடுகள் |
5 வருடங்கள். |
3. |
வரவு-செலவு வெளியீடுகள், வரவு-செலவு திட்டங்கள், கையேடுகள், சட்டமன்ற நடவடிக்கைகள், இந்திய சட்ட ரிப்போர்ட்ஸ் (சென்னை) |
3 வருடங்கள். |
5. |
துறை சம்மந்தமான வெளியீடுகள், வருடாந்திர/நிருவாக அறிக்கைகள், செய்தி மற்றும் சுற்றுலாத் துறையின் அறிவிப்பு வெளியீட்டு கையேடுகள், தமிழ்நாடு அரசிதழ், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வெளியீடுகள் |
1 வருடம் வரை அல்லது இருப்பு தீரும் வரை எது முந்தையதோ |
(இ) |
விற்பனை நிலைய வேலை நேரம் பெயர் மாற்றம் தொடர்பான கட்டணம் |
காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை |
(ஈ) |
வெளியீடுகளின்
|
துணை இயக்குநர்(வெளியீடுகள்), அவர்களுடன் தொடர்பு கொள்ளவும், இப்பொருள் குறித்து தொலைபேசி மூலமாகவோ கடிதம் மூலமாகவோ விவரங்கள் அளிக்க பணியாளர் ஒருவர் செயல்படுகிறார். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்.
044 - 2852 0038 |
(உ) |
முகவர்கள் |
சென்னை மாநகரத்திலும், பிற மாவட்டங்களிலும் அரசு வெளியீடுகளை விற்பனை செய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் உள்ளனர். |
|
இந்திய அரசு வெளியீடுகள் |
இந்திய அரசு வெளியீடாகிய இந்திய அரசியமைப்புச் சட்டம் (Constitution of India) மட்டும் அரசு வெளியீடுகள் விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்படுகிறது. மற்ற இந்திய அரசு வெளியீடுகள் சென்னை பெசன்ட் நகர், ராஜாஜி பவன் வளாகத்திலுள்ள இந்திய அரசு வெளியீடுகள் விற்பனை நிலையத்தில்தான் கிடைக்கும். |
|
புகார்கள் மற்றும் |
துணை இயக்குநர், (வெளியீடுகள்) அரசு வெளியீடுகள் விற்பனைப் பிரிவு, 110, அண்ணா சாலை, சென்னை-600 002. 044 - 2852 0038 |

எங்களை பற்றி | நிர்வாக அட்டவணை | பொதுமக்களுக்கான சேவை | அரசாங்கத்திற்கான சேவை | தமிழ்நாடு அரசிதழ்/ சிறப்பிதழ் | வடிவங்கள் | முக்கிய தொடர்புக்கு | முக்கிய இணைப்புகள் | பின்னூட்டம்